கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இன்று (29) அவர் கிரிஷ் மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இரு வழக்குகளுக்காகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கிரிஷ் வழக்கு:
நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எயார்பஸ் வழக்கு:
இந்த வழக்கில் அவரை ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவை நான்காவது சந்தேகநபராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (28) நீதிமன்றத்தில் பெயரிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.









