Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

கார்த்திகை 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா  வலியுறுத்து

இலங்கையில் அமைதி மற்றும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கான ‘சமூக உரையாடல் திட்டத்தின் ஊடாக, ஊழியர்கள் மற்றும் சமூகத்தினர் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும்,  வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் தீர்மானங்களை வடிவமைப்பதில் பங்களிப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் அரச துறை உரையாடலுக்கான முதலாவது தேசியக் கட்டமைப்பை நிறுவி, அரச சேவையில் சமூக உரையாடல் தொடர்பான பிரகடனமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கூட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீள் எழுச்சிச் செயற்பாடுகளின் போது அதிகரித்த வரிகள் மற்றும் பொருட்களின் விலைகள், கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைந்தமை மற்றும் தொடர்ச்சியாக நிலவிய வறுமை ஆகியவற்றின் காரணமாகக் குடும்பங்கள் மீது ஏற்பட்ட அழுத்தம் தொடர்ந்தும் நிலவுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரையாடலின் ஊடாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், மோதல்கள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீள் எழுச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் திட்டத்தின் ஊடாக அரசாங்கம், தொழில் வழங்குநர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகம் ஆகியோர் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார மீள் எழுச்சியின் ஊடாகச் சிறந்த அரச சேவை, பணியிடங்களில் நியாயமான சூழல் மற்றும் தமது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள மக்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பிரச்சினைகள் தீவிரமடைந்து பிளவுகளாக மாறுவதற்கு முன்னர் அவற்றை தீர்த்துக்கொள்வதற்காக மக்களை ஒன்றிணைத்து உரையாடலொன்றை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களுக்குச் செவிசாய்ப்பதோடு நின்றுவிடாமல், அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதே பொறுப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

அடுத்த செய்தி

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

தொடர்புடைய செய்திகள்

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!
அண்மைய செய்திகள்

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!

கார்த்திகை 25, 2026
வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா
அண்மைய செய்திகள்

வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

கார்த்திகை 25, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

கார்த்திகை 25, 2026
தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 25, 2026
ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
அண்மைய செய்திகள்

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார்த்திகை 25, 2026
மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்
அண்மைய செய்திகள்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

கார்த்திகை 24, 2026
மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் கொள்ளை இருவர் கைது

கார்த்திகை 24, 2026
 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
அண்மைய செய்திகள்

 கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

கார்த்திகை 24, 2026
அடுத்த செய்தி
ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check