வெலிகாமம், புதியதெரு முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் 16 வது பட்டமளிப்பு விழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29.11.2026) காலை 08.30 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
விழாவில் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலீபத்துஷ் ஷாதுலி மௌலவி அஸ்ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா வின் (அல் முர்ஸி) ஆதரவில் கீழ் கல்லூரியின் அதிபர் அல் உஸ்தாத் மௌலவி என் எம் எம் அஸ்கீன் (அல் முர்ஸி) தலைமையில் இடம்பெறுகிறது. இந்த விழாவில், பிரதம அதிதியாக உலகளாவிய காதிரிய்யா தரீக்காவின் ஆன்மீக தலைவரும் பக்தாத் பள்ளிவாசல் மற்றும் தர்காவின் பொறுப்பாளருமான மௌலானா அஷ்ஷேய்க் அஸ்ஸெய்யித்; அபீபுத்தீன் பின் அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் மன்ஸூர் அல் ஜைலானி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், எரிசக்தி பிரதி அமைச்சர் அர்க்கம் இல்யாஸ், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஹ்சன் ராசிக் மரிக்கார், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.
நூற்றாண்டு விழாவில் சென்னை ஜாமியா அல் ஹிதாயா அரபுக் கல்லூரியின் நிறுவனர் அதிபருமான அல்ஹாஜ் மௌலவி அல்ஹாபிழ் அல் உஸ்தாத் டாக்டர் ஷதீதுத்தீன் பாஜில் பாகவி அவர்கள் சிறப்புப் பேச்சாளர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இவ்விழாவின் போது முர்ஸிய்யா அரபுக் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற 18 உலமாக்கள் பட்டம் பெற்று கௌரவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.









