ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2026ஆம் ஆண்டில் ருமேஷ் தரங்க பெற்றுவரும் தொடர் சர்வதேச வெற்றிகளில் இது மேலும் ஒரு முக்கிய சாதனையாகும். இதற்கு முன்னர் கிளாஸ்கோ கொமன்வெல்த் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
தற்போது ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உலகின் முதலிட வீரராக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள பதிரகே, 92.62 மீற்றர் என்ற தனிப்பட்ட சிறந்த பெறுபேற்றையும், இலங்கை தேசிய சாதனையையும் வைத்துள்ளார். இந்த சாதனையை அவர் ஜூன் மாதம் நடைபெற்ற ரோமா டைமண்ட் லீக் போட்டியில் பதிவு செய்தார்.
2026ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக சாதனைகளைப் படைத்ததன் காரணமாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் முக்கிய பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்.








