Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுப் பயண அனுமதி மறுப்பு

கார்த்திகை 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
FCID யில் இருந்து வௌியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கி, சிங்கப்பூர் சென்று மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோட்டாபய ராஜபக்‌ஷ கோரியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கு அனுமதி மறுத்துள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படுவாரா என்பது தொடர்பில் அவசரமாகத் தெளிவுபடுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்பியமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளின் பின்னணியிலேயே கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை 2027 மார்ச் 5ஆம் திகதி முன்னெடுக்க உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முந்தைய செய்தி

மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?

தொடர்புடைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?
அண்மைய செய்திகள்

மத்திய மலைநாட்டில் நில அதிர்வு அபாயம்?

கார்த்திகை 25, 2026
2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!
அண்மைய செய்திகள்

2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் ஜெனிபர் பாரெட்டோ!

கார்த்திகை 25, 2026
வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா
அண்மைய செய்திகள்

வெலிகாமம் முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

கார்த்திகை 25, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

கார்த்திகை 25, 2026
தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

தெல்லிப்பழையில் நிர்மாணிக்கப்பட்ட 93 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

கார்த்திகை 25, 2026
ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
அண்மைய செய்திகள்

ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார்த்திகை 25, 2026
மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா  வலியுறுத்து
அண்மைய செய்திகள்

மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

கார்த்திகை 25, 2026
மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்
அண்மைய செய்திகள்

மஹா எலிய தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

கார்த்திகை 24, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check