கொழும்பு சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘வானவில்’ பக்தி இசை நர்த்தன சங்கமம் கலை விழா, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பாடசாலைக்கென நவீன விளையாட்டு வளாகமொன்றை அமைப்பதற்கான நிதி திரட்டும் நோக்கில் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் ப்ரதீப் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர், நடிகை குஷ்பு சுந்தர் பங்கேற்றிருந்தார்.
தமிழகத்தை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிருந்திருந்தனர்.









