2026ம் ஆண்டுக்கான வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 30 ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
2023 ம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ், வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரிவினர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 தினங்களுக்குள் அனைவரும் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
- பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள்.
- பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்
- தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்
- தேசிய விளையாட்டுச் சங்கங்களின் உத்தியோகத்தர்கள்
- சுங்கத் திணைக்கள அதிகாரிகள்
தமது விபரங்களை https://aldciabocgovlk/ என்ற இணையத்தள முகவரியின் ஊடாக மட்டுமே விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
குறித்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0767011954 அல்லது 0112587287 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியுமென இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.









