நவீனமயமாக்கப்பட்டுள்ள உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம், இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.
கொழும்பிலுள்ள BES கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் , சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி, இலங்கைக்கான கொரியக் குடியரசு தூதுவர் மியோன் லீ, கொரியா சர்வதேச சுகாதார சேவை அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் பெக் குவான்-பெக் , சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் KOICA, Korea Exim Bank, Saemaul Foundation ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம், கொரிய சர்வதேச சுகாதார சேவை அறக்கட்டளையின் நிதி உதவியுடன் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகள் மற்றும் புதிய கேட்போர் கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக ரூ. 501 மில்லியனுக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
மத்திய, வடமத்திய, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென்னிலங்கை மாகாண சபைகளின் கீழ் உள்ள உயிர்மருத்துவ பொறியியல் சேவை அலகுகளுக்கு, பொறியியல் கருவிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை உபகரணங்களை வழங்குவதற்காக ரூ. 228 மில்லியன் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








