Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

வைகாசி 27, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள  காணிகளை  விரைவில் விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள அதிகளவான காணிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் காணி மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.  அந்தக் காணிகளை விடுவிக்கும் வகையில் உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு,  காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வுகளையும் மேற்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதில் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை விடுவிக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அதேவேளை,  உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை விடுவித்து, முழுமையாக வீதிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உடனடியாக விடுவிக்க முடியாத நிலையில் காணப்படும் காணிகள் குறித்து மேலும் ஆராயப்பட்டு, எதிர்காலத்தில் அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி,  அது குறித்துத் தீர்மானிக்கப்படும்.  விமான நிலைய விரிவாக்கத்திற்காக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அந்தக் காணிகளை வழங்குவது குறித்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.  அதேபோல்,  விவசாயக் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் விபரங்கள் கோரப்பட்டுள்ளன. தரவுகள் கிடைத்ததும் அக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்தியாவின் வாகன அன்பளிப்பு

அடுத்த செய்தி

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ள அபாய எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!
அண்மைய செய்திகள்

ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம்!

புரட்டாதி 24, 2026
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..
அண்மைய செய்திகள்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

புரட்டாதி 23, 2026
தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
அடுத்த செய்தி
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.