நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று வரையில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,838 ஆகப் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 27,464 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். சதவீத அடிப்படையில் 21.25% ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் 16,457 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,685 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதுவரை 61 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இது சதவீத அடிப்படையில் 0.07% ஆகுமென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.








