மக்கள் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளித்துவருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனும் தற்போதைய அரசாங்கத்துடனுமே நிற்கின்றனர்.
குறிப்பாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் அரசாங்கத்துக்கே ஆதரவாக உள்ளதாகவும் பிரதி அமைச்சர் பிரதீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பலமானதொரு எதிர்க்கட்சியை உருவாக்கவே முயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இன்று எதிர்க்கட்சியைச் சுற்றி சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களே சூழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.









