அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஏப்ரல் மாத கொடுப்பனவாக 3.087 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 72,525 சிரேஷ்ட பிரஜைகளுக்கு 362.6 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய தகுதியுடைய பயனாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்து, உரிய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.








