Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல். இரு சந்தேகநபர்கள் கைது

புரட்டாதி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 11ம் திகதி அதிகாலை வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் ஏற்கனவே ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 11 கிராம் 960 மில்லிகிராம் அளவிலான ‘ஐஸ்’ எனப்படும் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் முறையே பிலியந்தலை மற்றும் கஹத்துடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக முன்னதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா ஏற்பாடு!

புரட்டாதி 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது
அண்மைய செய்திகள்

ஹட்டனில் காணி வழங்குவதாகக் கூறி பணம் பெற்ற நகர சபை உறுப்பினர் கைது

புரட்டாதி 25, 2026
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவி ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்!

புரட்டாதி 25, 2026
டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து
அண்மைய செய்திகள்

டிக்கோயா பகுதியில் முச்சக்கரவண்டி – பேருந்து மோதி விபத்து

புரட்டாதி 25, 2026
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 25, 2026
 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்
அண்மைய செய்திகள்

 நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி பஸ் நிலையம்

புரட்டாதி 25, 2026
மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்
அண்மைய செய்திகள்

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக பிரகடனம்

புரட்டாதி 25, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check