எல்பிட்டிய ஓமத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றை இலக்காக கொண்டு நேற்றிரவு துப்பாக்கிச் பிரயோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வீட்டின் ஜன்னல்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








