நேபாளத்திலுள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.
அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் எவருக்கும் இதுவரை எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் 102 இலங்கையர்கள் தங்கியுள்ளதாக காத்மண்டுவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், உடனடியாக தூதரகத்தை தொடர்புகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சும் நேபாளத்திலுள்ள இலங்கை தூதுரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பிலுள்ளது.









