Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கார்த்திகை 5, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

உலக கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

41 வயதான ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (05) தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான காணொளி மூலம் அறிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாத சர்வதேசப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் போர்த்துக்கல் தேசிய அணிக்காக விளையாடுவதை அவர் நிறுத்தவுள்ளார்.

“போர்த்துக்கல் மக்களே! நமது தேசிய அணியின் 7ஆம் இலக்க ஜெர்சியைத் திருப்பிக் கையளிக்கும் நேரம் வந்துவிட்டது. அந்த ஜெர்சி எனக்கு மட்டுமே சொந்தமானது என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக அதனை அணியும் பாக்கியமும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது” என தனது பிரியாவிடை காணொளியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இது எளிதான முடிவல்ல என்றும், சில முடிவுகள் மனதால் மட்டுமன்றி இதயத்தாலும் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரொனால்டோவின் வரலாற்றுச் சாதனைகள்

சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் போர்த்துக்கல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 146 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் ஆண்கள் சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற உலக சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளார்.

அத்துடன் ஐந்து முறை பலோன் டி ஓர் விருதையும் வென்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் மற்றும் 2019, 2025ஆம் ஆண்டுகளில் UEFA Nations League கிண்ணங்களை வென்ற போர்த்துக்கல் அணியின் வெற்றிப் பயணத்திலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பயிற்சியாளருடனான முரண்பாடும் இறுதிக்கட்ட சர்ச்சையும்

போர்த்துக்கல் அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் உடனான கருத்து முரண்பாடுகள் மற்றும் அணியிலிருந்து விலகிய சம்பவம் உள்ளிட்ட சர்ச்சைகளுக்குப் பின்னணியில் இந்த ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும், தனது 23 ஆண்டுகால சர்வதேசப் பயணத்தில் ஆதரவளித்த ரசிகர்கள், குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு வீரரின் ஓய்வு மட்டுமல்ல… உலக கால்பந்து வரலாற்றில் தனி அத்தியாயம் படைத்த 7ஆம் இலக்க ஜெர்சியின் 23 ஆண்டுகால சர்வதேசப் பயணத்தின் நிறைவாகவும் இது அமைந்துள்ளது.

முந்தைய செய்தி

  TIN சான்றிதழ் கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை ஒத்திவைப்பு!

அடுத்த செய்தி

கொத்மலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நவீன வசதிகளுடன் திறந்து வைப்பு!

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 3 பேர் பலி – 36 பேர் மாயம்!

கார்த்திகை 22, 2026
காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு
அண்மைய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு

கார்த்திகை 22, 2026
ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!

கார்த்திகை 22, 2026
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிய நடைமுறை அமுல்
அண்மைய செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளம்

கார்த்திகை 22, 2026
மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
அடுத்த செய்தி
கொத்மலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நவீன வசதிகளுடன் திறந்து வைப்பு!

கொத்மலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நவீன வசதிகளுடன் திறந்து வைப்பு!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check