2026ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் தேசிய கலாசார ஆடை அணிவகுப்பில் இஸ்ரேல் அழகி டேனியல் யப்லோன்கா பார்வையாளர்களின் எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ளார்.
நவம்பர் 21ஆம் திகதி புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற நிகழ்வில் அவர் மேடையேறியபோது பார்வையாளர்களின் ஒரு பகுதியினர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேவேளை, சிலர் அவருக்கு ஆதரவாகக் கைதட்டியுள்ளனர்.
25 வயதான டேனியல் யப்லோன்கா அணிந்திருந்த ஆடையில் ஜெருசலேமின் பழைய நகரைப் பிரதிபலிக்கும் வடிவமைப்பும், ஹீப்ரு, அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் ‘சமாதானம்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன.
இந்த ஆடையை ஆடை வடிவமைப்பாளர் ஜேக்கப் மேயர் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில், ஆடையின் வடிவமைப்பு மற்றும் அதில் இடம்பெற்றிருந்த ஜெருசலேம் தொடர்பான சித்தரிப்புகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, பாலஸ்தீன விவகாரம் மற்றும் காஸா போர் பின்னணியில் சமாதானச் செய்தி முன்வைக்கப்பட்டமை குறித்து இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.









