இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, இளைஞர்களின் எழுச்சி நாயகன் டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95ஆவது பிறந்த தினம் இன்று!
இந்தியாவின் ஏவுகணை மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறைகளின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய அவர், தனது எளிமை, அறிவு, விடாமுயற்சி மற்றும் ஊக்கமளிக்கும் சிந்தனைகளால் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர்.
மாணவர்களையும் இளைஞர்களையும் கனவு காணவும், அந்தக் கனவுகளை நனவாக்க உழைக்கவும் ஊக்குவித்த மக்கள் ஜனாதிபதி அவர்.
உடலால் மறைந்தாலும், உள்ளங்களில் என்றும் வாழும் அறிவியல் நாயகனுக்கு புகழ் வணக்கம்!
டொக்டர் அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!









