ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இரு பிரதிவாதிகளும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த வழக்கை முன்விளக்க மாநாட்டிற்கு (Pre-Trial Conference) அழைக்குமாறு உத்தரவிட்டது.
CIABOC முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின்படி, தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யாத நிலையில் யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவில் உள்ள Royal Naval College பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் கரன்னாகொட அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும், யோஷித ராஜபக்ஷ அதன்மூலம் முறையற்ற நன்மையைப் பெற்றதாகவும் CIABOC குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.








