அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (17) மேலும் சரிவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய பரிவர்த்தனை விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.327.90 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று புதன்கிழமை டொலரின் கொள்வனவு விலை ரூ.326.31 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று அது ரூ.327.90 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.336.92 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை விற்பனை விலை ரூ.335.48 ஆக இருந்தது.
இதன்படி, டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயில் சிறியளவிலான மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.








