நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள முகு மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
🔴 முதல் நிலநடுக்கம்: அதிகாலை 1:51 — 4.5 ரிக்டர்
🔴 இரண்டாவது நிலநடுக்கம்: அதிகாலை 4:28 — 4.2 ரிக்டர்
இரு நிலநடுக்கங்களின் மையப்பகுதியும் முகு மாவட்டத்தின் கலை (Kalai) பகுதியில் பதிவாகியுள்ளதாக நேபாள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அதிர்வுகள் அருகிலுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன . உயிரிழப்பு அல்லது பெரியளவிலான சொத்து சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், நேபாளம் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்தத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், தொடர்ந்தும் நிலஅதிர்வுகள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.









