சீனாவில் கிங்காய் மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தின் ஹைக்ஸி மாவட்டத்தில் 10 கி.மீ ஆழத்தில் உயரமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது
அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 05.06 மணியளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் நிலநடுக்க மையத்திற்கு அருகிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்த அனைத்துத் தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.








