தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, தனியார் பஸ் சேவைகளை 50% குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
பஸ் வண்டிகளை தொடர்ந்தும் நட்டத்துடன் சேவையில் ஈடுபடுத்த முடியாது என்பதால், நேர அட்டவணைகளை மாற்றி, பயண முறைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியள்ளார்.
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது துறைசார் அமைச்சரோ இதுவரை எந்தவொரு பதிலையம் வழங்கவில்லையெனவும்,
இம்மாத இறுதியில் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடுமென்பதால் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் பஸ் கட்டணங்கள் 20% முதல் 25% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.









