இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் பிராந்திய நிலையத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.
திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் கிளையில் நீண்டகாலமாக நிலவிவரும் இடவசதியின்மை, விரிவுரை மண்டபங்கள்,உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.









