Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

தொடர்ச்சியாக 2ஆவது முறையாகவும் IPL கிண்ணம் RCB வசமானது.

ஆனி 1, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தொடர்ச்சியாக  2ஆவது முறையாகவும்  IPL கிண்ணம்  RCB வசமானது.

19 ஆவது ஐபீஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி , கிண்ணத்தை கைப்பற்றியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களுர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி,  தனது ஆரம்ப விக்கட்டுகளை குறைந்த ஓட்டங்களுக்குள் இழந்து தடுமாறிய நிலையில், வொஷிங்டன் சுந்தரின் நிதானமான துடுப்பாட்டம் அணிக்கு ஓரளவு கைகொடுத்தது.

வொஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் . எதிர்பார்ப்புமிக்க சுப்மன்கில் , ஷாய் சுதர்சன் ஆகியோர் குஜராத் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.
20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார், ஜொஸ் ஹெசல்வுட் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுகளையும், ராஷிக் சலாம் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இறுதிப்போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்கிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை விராத் கோஹ்லி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி வழங்கியது.

வேங்கடேஷ் ஐயர் 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார். விராத் கோஹ்லி 42 பந்துகளில் 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிவரை அழைத்துச்சென்றார்.

இறுதிப்போட்டியொன்றில் வெற்றிக்கான ஓட்டத்தை பெற வேண்டுமென்ற தனது நீண்டநாள் கனவு நிறைவேறியதாகவும், போட்டியின் முடிவில் விராத் கோஹ்லி குறிப்பிட்டிருந்தார்.
2ஆவது முறையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி தொடர்ச்சியாக செம்பியன் மகுடத்தை சூடியது

. இந்த தொடரில் சிறப்பாக செயற்பட்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வைபவ் சூரியவம்சி வளர்ந்துவரும் வீரர், அதிக ஓட்டங்களை குவித்த வீரர், அதிக சிக்சர்களை பெற்றுக்கொண்ட வீரர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுக்கொண்டார்.

அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய வீரருக்கு ஊதா நிற தொப்பியை காகிசோ ரபாடா தனதாக்கினார்.

முந்தைய செய்தி

தானசாலை வரிசையின் மீது மோதிய கெப் ரக வாகனம்

அடுத்த செய்தி

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை

தொடர்புடைய செய்திகள்

கொழும்புக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம்
அண்மைய செய்திகள்

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு. சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

ஆனி 5, 2026
மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட 03 பேர் பலி
அண்மைய செய்திகள்

மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட 03 பேர் பலி

ஆனி 4, 2026
ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து. 8 பேர் பலி
அண்மைய செய்திகள்

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்தில் உயிரிழப்பு 11 ஆக அறிவிப்பு

ஆனி 4, 2026
பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு
அண்மைய செய்திகள்

பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கு ஊட்டச்சத்து குறைபாடு

ஆனி 4, 2026
காலி தடல்ல பகுதியில் பஸ் விபத்து 03 பேருக்கு காயம்
அண்மைய செய்திகள்

காலி தடல்ல பகுதியில் பஸ் விபத்து 03 பேருக்கு காயம்

ஆனி 4, 2026
ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து. 8 பேர் பலி
அண்மைய செய்திகள்

ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து. 8 பேர் பலி

ஆனி 3, 2026
765 மில்லியன் ரூபா பெறுமதியான மெமோகிரபி இயந்திரங்கள் வைத்தியசாலைகளுக்கு
அண்மைய செய்திகள்

765 மில்லியன் ரூபா பெறுமதியான மெமோகிரபி இயந்திரங்கள் வைத்தியசாலைகளுக்கு

ஆனி 1, 2026
அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை
அண்மைய செய்திகள்

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை

ஆனி 1, 2026
அடுத்த செய்தி
அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.