அரச நிறுவனங்களில் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கை அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களும் குறைத்தல் (Reduce) மீள்பயன்பாடு (Reuse) மீள்சுழற்சி (Recycle) ஆகிய 3R’ கருப்பொருளுக்கு இணங்கச் செயல்பட வேண்டும்.
சுற்றறிக்கையானது மத்திய சுற்றாடல் அமைச்சின் உடன்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாகஇ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








