ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பு ஜூன் மாதம் 09ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் மொஹமட் மிஹைல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பும் இன்றைய தினம் அறிவிக்கப்படவிருந்தது. எனினும், குறித்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்குகளின் தீர்ப்புகள் இன்னும் தயாராகவில்லையெனவும் அறிவிப்பை ஜூன் மாதம் 09ம் திகதி மேற்கொள்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.









