2026ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அடுத்த சுற்றான பிளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன்.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறியிருந்த நிலையில் 69வது லீக் போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 30 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 4வது அணியாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிள்ளது.
இந்நிலையில் பிளேஓப் சுற்றின் முதலாவது தகுதிகான் போட்டி எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளது.புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 2ம் இடத்திலுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் எதிர்கொள்ளவுள்ளன.
போட்டியில் வெற்றியீட்டும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு 2வது தகுதிகான் போட்டியில் மற்றொரு வாய்ப்பு கிடைக்கப்பெறும்.
புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 4ம் இடத்திலுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதும் வெளியேற்றல் சுற்றுப்போட்டி எதிர்வரும் 27 ம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் தோல்வியடைம் அணி வெளியேற்றபட்டு, வெற்றி பெறும் அணி, ஏற்கனவே 1வது தகுதிகான் போட்டியில் தோல்வியடைந்த அணியை எதிர்கொள்ளும். குறித்த போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கும









