‘மெய்யழகன்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கார்த்தியின் கைவசம் ‘வா வாத்தியார், சர்தார் 2, மார்ஷல், கைதி 2, ஹிட் 4’ ஆகிய 5 திரைப்படங்கள் உள்ளன.
அவற்றில் ‘மார்ஷல்’ திரைப்படத்தை ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்குகிறார்.
படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் சத்யராஜ், பிரபு, லால், ஈஸ்வரி ராவ், முரளி ஷர்மா, ஜோன் கொக்கென் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்களின் கனவு நாயகனாக மாறியுள்ள சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
திரைப்படத்தை ‘ட்ரீம் வொரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருச்சியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.









