வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின், தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்கோட்டை பிரதேசத்தில் இன்று (17) முற்பகல் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பஸ் வண்டி, வேன் மற்றும் கார் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றோடு ஒன்று மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் மூன்று வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









