துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம பிரதே சபையில் கடமையிலிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைதந்த துப்பாக்கிச் சூடு நடத்திச் சென்ற துப்பாக்கிதாரிகள் ,பிரதேச சபைத் தலைவரிடம் கடிதத்தமொன்றில் கையெழுத்து பெறுவதற்காக சபைக்குள் நுழைந்த நிலையில் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.









