கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைபடுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்படும் மின் தடை காரணமாக நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு 1-15 ,பத்தரமுல்ல , மிரிஹான, மடிவல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஹெச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.









