ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான இவர் ஜப்பானின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படுகிறார்.
ஜப்பான் பாராளுமன்றத்தின் கீழ் சபை மற்றும் மேல் சபை இரண்டிலிருந்தும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி வரலாறு படைத்துள்ளார்.
கடும் போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றுள்ளார்.
தன்னுடன் போட்டியிட்ட 4 வேட்பாளர்களையும் தோற்கடித்து சனே டகாய்ச்சி பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.








