ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபரொருவர் கைது வவுனியா பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டுடன் 359,000 போதை மாத்திரைகளை மறைத்து சந்தேகநபர் எடுத்துச்சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.








