தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கு தனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளிப் பண்டிகை இருள் நீங்கி, ஒளி பிறப்பதை அடையாளப்படுத்துவதாகவும், இன்று இலங்கை தேசம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்பதாகவும், நீண்ட கால பொருளாதார, சமூக இருளிலிருந்தும், பின்னடைவுகளிலிருந்தும் விடுபட, மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் சுமந்து நிற்கும் ஒரு காலகட்டம் இதுவெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை கூட்டாக ஆரம்பித்துள்ளதாகவும், இந்த தீபாவளியின் ஒளி, பொருளாதார மீட்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வித்திடும் மெய்ஞ்ஞான ஒளியாக அமையட்டுமென பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அனைவரும் கலாசாரப் பல்வகைமையின் மதிப்பை உணர்ந்து, கௌரவம், ஏற்றுக்கொள்ளல், சகோதரத்துவம் ஆகிய பண்புகளுடன் கைகோர்ப்போமெனவும்
வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளி,அனைத்து இலங்கையர்களினதும் மனங்களில் நம்பிக்கை,நல்லிணக்கம் மற்றும் ஞானத்தின் ஒளியைப் பரவச் செய்ய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.








