டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவுனர் எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை ததவறவிட்டுள்ளார்.
ஒரேக்கில் (ORCL) இணைநிறுவுனர் லெரி எலிசன் ( Larry Ellison) உலக கோடீஸ்வரர் பட்டியலில் எலான் மஸ்கை பின்தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.
ஒரேக்கிள் நிறுவனத்தின் வருமான வளர்ச்சி அறிக்கைக்கமைய லெரி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பான 385 பில்லியன் டொலர்களை லெரி எலிசன் தாண்டியுள்ளதாக ப்ளும்பேர்க் தெரிவித்துள்ளது.









