இலங்கை அணிக்கெதிரான 2வது டி20 போட்டியில் சிம்பாப்பே அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பதிவுசெய்துள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று (6) ஹராரேயில் இடம்பெற்றது,
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்பே அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதனடிப்படையில்
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அனுபவமிக்க வீரர்கள் சிம்பாப்பே பந்து வீச்சாளர்களிடம் மண்டியிட்டனர். கமில் மிஷார ஓரளவு சுதாகரித்துக்கொண்டு 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
சிம்பாப்பே அணி 81 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றியிலக்கை 14.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.
மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் 1 – 1 என சமநிலை பெற்றுள்ளது.









