Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துகள்!

புரட்டாதி 5, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஜனாதிபதிக்கு பதிலாக  … ?

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மரியாதையுடன் கொண்டாடப்படும் முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தினமான, மீலாதுன் நபி தினம் இன்றாகும்.

இறுதி நபியான முஹம்மது நபி அவர்கள், சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து, அதற்காகப் பெரும் பணியை ஆற்றியவர். இஸ்லாமிய ஒழுக்க நெறியை நிறுவுவதில் முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். அக்கால சமூகத்திற்கு இஸ்லாத்தின் செய்தியை முன்வைப்பதில் நபிகள் நாயகம் கடுமையான துன்பங்களை அனுபவித்தார். அத்தகைய தருணங்களிலும் கூட, அவர் பொறுமையையும் மௌனத்தையும் கடைபிடித்தார்.
பிளவுபட்ட அரபு சமூகத்திற்குப் பதிலாக,இஸ்லாத்தின் அடிப்படையையும் அர்த்தத்தையும் சுமக்கின்ற,சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் கொண்டு உன்னத விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க, 23 வருடங்களாக, முஹம்மத் நபி அவர்கள் தனது பிரசங்கம், செயற்பாடுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்மாதிரி மூலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இனம், சாதி, நிறம் என்ற வகையில் எந்தவொரு நபரும் மற்றொருவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்ற சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மகத்துவமான கருத்தே அவரது போதனைகளின் அடித்தளமாகும்.
சமூகத்தில் நிலவும் இடைவெளிகளை நீக்கி, மக்களின் இதயங்களில் சமத்துவத்தை விதைப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கிய நபியவர்களின் முன்மாதிரி, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூக சவால்களை முறியடித்து, சமத்துவம், சட்டத்தை மதித்தல் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ஒளிவிளக்காக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில், எம்முடன் இணைந்துள்ள நீங்களும் நபிகளாரின் உண்மையான வாழ்க்கை முன்மாதிரியை வாழ்க்கைக்கு நெருக்கமாக எடுத்து, இந்த மீலாதுன் நபி தினத்தை மென்மேலும் அர்த்தமுள்ளதாக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிகரமான மீலாதுன் நபி தின வாழ்த்துகள்!
முந்தைய செய்தி

எல்ல – வெல்லவாய விபத்தில் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடம்

அடுத்த செய்தி

பேச்சுவார்த்தை தீர்வு இல்லாவிடின் ஆயுதபலம் . எச்சரிக்கை விடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
பேச்சுவார்த்தை தீர்வு இல்லாவிடின்  ஆயுதபலம் . எச்சரிக்கை விடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி

பேச்சுவார்த்தை தீர்வு இல்லாவிடின் ஆயுதபலம் . எச்சரிக்கை விடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.