பேச்சுவார்த்தை மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், ஆயுத பலத்தை பயன்படுத்தி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என யுக்ரேன் ஜனாதிபதிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுவான புரிதல் செயற்பாடுகள் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுக்கு வாய்ப்புள்ளது. அதற்கமைய துாதரக உறவுகள் மூலமான தீர்வையே ரஷ்யா விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறின்றி ஆயுத பலத்தால் மோதலை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினாலும்இ ரஷ்யா அதற்கும் தயாராக இருக்கிறது. யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ரஷ்யா தயாராக இருக்கிறது. ஆனால் ஷெலன்ஸ்கி மொஸ்கோ வந்தால் மட்டுமே இது சாத்தியமென ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஷெலன்ஸ்கியை மொஸ்கோவில் மட்டுமே சந்திக்க வாய்ப்புள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ள கருத்தை ஏற்க உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.









