மத்திய அதிவேக வீதியின் மீரிகம நுழைவாயிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 11 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், அதிவேக நெடுஞ்சாலையின் 41 ஆவது கிலோ மீற்றர் மைல் கல் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கோதுமை மா ஏற்றிச்சென்ற கனரக லொறியொன்றும் , எரிப்பொருள் ஏற்றிச்சென்ற பவுசர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதன் பின்னர், குறித்த இரண்டு வாகனங்களும் பள்ளமொன்றில் கவிழ்ந்துள்ளன.
விபத்தில் உயிர்தப்பிய பவ்சர் வாகனத்தின் உதவியாளர் காயமடைந்திருந்த பவ்சர் சாரதியை மீட்டுள்ளார். அவர் வதுபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாகவும், விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.









