ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கட்சியின் சம்மேளனம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை 6ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தை நடத்தவதற்கு ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அதனை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் அது தொடர்பான தீர்மானம் பெறப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வை மற்றுமொரு தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தலதா அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.









