ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்றைய தினம் இரவுவேளையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியூடாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நிலநடுக்கத்தின் உணர்வு இந்தியாவின் டெல்லி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.









