வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட ‘Made in Sri Lanka’ வர்த்தகக் கண்காட்சி நாளை அருகம்பேயில் ஆரம்பமாகவுள்ளது.
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்துள்ள ‘‘Made in Sri Lanka’’ வர்த்தகக் கண்காட்சி நாளை முதல் எதிர்வரும் 31 ம் திகதி வரை 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
பிரபலமான சுற்றுலாத் தலமான அம்பாறை மாவட்டத்தில் உள்ள அழகிய அருகம்பே கடற்கரையை மையமாகக் கொண்டு காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையானது, தொழில் முனைவோருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் ‘‘Made in Sri Lanka’’ வர்த்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









