யாழ் செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில்இ மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணிப் புதைகுழியில் இருந்து நிலநிறப் பையுடன் மீட்கப்பட்ட எஸ்-25 என அடையாளப்படுத்தப்பட்ட என்புத் தொகுதி சுமார் 4 முதல் 5 வயதுடைய பிள்ளையுடையது என்று நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்இ எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.








