நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரத்திலுள்ள சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலும், அவர்களுக்கென எதிர்காலமொன்றை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதனொரு கட்டமாக வீதியோர சிறுவர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கும் ‘அர்த’ விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களாகிய நீங்கள் நாட்டிற்குச் சொந்தமானவர் – முழு நாடும் உங்களுக்குச் சொந்தமானது’ என்ற கருப்பொருளின் கீழ் பத்தரமுல்லை செத்சிரிபாய வளாகத்தில் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்கென பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ் மாதாந்தம் சிறுவர்களின் கணக்கில் ஐயாயிரம் ரூபா வைப்பிலிடப்படவுள்ளது. அதற்கமைய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் சிறுவர்கள் சிலரின் வங்கிக் கணக்கில் நிதியை வைப்பீடு செய்து திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.









