தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்டுள்ளது.
வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








