2009 ஆம் ஆண்டு வெளியாகி பல்வேறு விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் 2 வது பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இயக்குனர் டேனி பாய்ல் குறித்த படத்தை இயக்கியிருந்தார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இரண்டு ஒஸ்கார் விருகளை சுவீகரித்தது.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர், ஒலி அமைப்பு, எடிட்டிங் என ஒஸ்கர் விருதுகளை அள்ளியது.
இந்நிலையில் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் 2 வது பாகம் வெளியாகுமா? என ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே கேள்வி நிலவியது.
ஸ்லம்டாக் மில்லியனர் பாகம் 2 விரைவில் உருவாகவுள்ளதாகவும். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இரசிகர்கள் மீண்டும் ஒஸ்கார் என பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.









