ஹெட்டன் – வட்டவளை பகுதியில் இன்று காலை தனியார் பஸ்சொன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் நால்வர் காயமiடைந்துள்ள நிலையில், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் தனியார் பஸ்சின் ஒரு பகுதி உடைந்து இரண்டு துண்டுகளாக பிரிந்துள்ளன.
கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பஸ் இ.போ.ச பஸ் எதிர்திசையில் வந்ததை கண்டு பிரேக் போட்டதில் தனியார் பஸ்ஸின் பின்பகுதி நழுவி இ.போ.ச பஸ்ஸின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









