பதுளை மாவட்டம், ஊவா பரணகம, அலகொல்ல தோட்டப் பகுதியில் நிலச்சரிவு அதி-அபாய வலயத்தில் வசித்து வரும் 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அலகொல்ல பகுதியில் நாளை முற்பகல் 9 மணிக்கு புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
சுமார் 13 வருடங்களாக பாதுகாப்பான வீடுகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்ட 51 குடும்பங்களுக்கு, தலா சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் 10,000 வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
நிலச்சரிவு அபாயம் அதிகம் காணப்படும் பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த இந்த 51 குடும்பங்களுக்கும், புதிய பாதுகாப்பான வீடுகள் கிடைப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலகொல்ல தோட்ட மக்களின் நீண்டகால வீடமைப்புத் தேவைக்கு தீர்வாக அமையவுள்ள இந்தத் திட்டம், நாளை அடிக்கல் நாட்டுடன் ஆரம்பமாகிறது.








