சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தலைமையிலான பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக குறித் குழுவினர் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் நாட்டுக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் நாட்டில் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் வொஷிங்டனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்திற்கமைய தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படத் தயாராக உள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.








